திருட்டுச் சம்பவம் குறித்து பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் திகதி பம்பலப்பிட்டி (Bambalapitiya) தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வீடோன்றில் இருந்து தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த தினம் வீட்டிற்கு துப்பரவு பணிகளுக்காக வந்த பெண் ஒருவரே இந்த நகைகளை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நகைகளை களவாடிய பின் அவர் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
பெண்ணை பற்றிய விபரங்கள்
இச்சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு குறித்த பெண்ணை தேடும் பணியில் பொலிஸார் மும்மூரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பெண்ணை பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கு பொலிஸார் ஊடகங்களின் உதவியை நாடியுள்ளனர்.
சிசிடிவி கமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து அவர் முச்சக்கர வண்டியில் ஏறி புறக்கோட்டையில் இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த படத்தில் இருக்கும் பெண்ணை பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 0718594453 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை தருமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |