மக்களை ஏமாற்றும் அரசாங்கம்! மற்றுமொரு பொய் அம்பலம்
கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் நபர்கள் மற்றும் பாதிக்கப்படுவோர் குறித்த சரியான தரவுகளை அரசாங்கம் மறைப்பதாக அண்மையில் வௌியான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் சாட்சிகள் சில வெளிவந்துள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் வழங்கிய தகவல்கள் மூலம் இந்த விடயங்கள் வெளிவந்துள்ளன.
பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிடும் தகவல்களுக்கு இடையில் பாரிய முரண்பாடு காணப்படுகிறது. உதாரணமாக கேகாலை மாவட்டத்தில் கடந்த 16ம் திகதி 13 பேர் மாத்திரமே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு கூறியுள்ள போதும் மாவட்ட சுகாதார பணிப்பாளர் வழங்கியுள்ள தகவலில் அன்றைய தினம் 505 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி உண்மையான தொற்றாளர்கள் சுமார் 8 மடங்கு குறைத்தே தொற்றுநோய் தடுப்பு பிரிவு வழங்கியுள்ளது.
இவ்வாறு உண்மை தகவல்களை மறைத்து வழங்கும் போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது என வைத்திய விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவ உயர் அதிகாரியும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு உயர் வைத்திய அதிகாரியும் இணைந்தே இவ்வாறு தகவல்களை திரிபுபடுத்தி வழங்குவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் குற்றம் சுமத்தியுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
