தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுவதற்கு மற்றுமொரு சட்ட நகர்வு
காலி முகத்திடலில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அரகலய போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுமாறு பொலிஸாருக்கு சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவை நிறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபரின் மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கு அனுமதியளித்த மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
போராட்டகாரர்கள் மீதான தாக்குதலுக்கு
இந்த மேன்முறையீடு தொடர்பில், தேசபந்து தென்னகோனின் சட்டத்தரணி சில்வாவின் ஆரம்ப ஆட்சேபனையையும் நீதியரசர்கள் ஆயம் நிராகரித்தது.
பொலிஸாருக்கு ஆலோசனை வழங்க சட்டமா அதிபருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரம் உள்ளது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் வாதிட்டார்.
தேசபந்து தென்னகோனை பல தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் சந்தேக நபராகப் பெயரிட சட்டமாஅதிபர் பரிந்துரைத்தார்.
இதில் போராட்டகாரர்கள் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததற்கான குற்றச்சாட்டுகளும் அடங்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 16 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
