இலங்கை மக்களுக்கு மற்றுமொரு தலையிடி - அதிகரிக்கும் விலை
எதிர்வரும் வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தாவிட்டால் இந்த நிலை ஏற்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாரிய நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அதற்கமைய அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோருகின்றது.
இதேவேளை, அரிசி பொதி செய்ய பயன்படுத்தப்படும் அரிசி மூடை உற்பத்தியாளர்கள் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன், அதற்கேற்ப அரிசியின் விலையும் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
You May Like This Video

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 12 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
