உடன் அமுலாகும் வகையில் கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்!
கொழும்பு 09 இல் உள்ள வேலுவனராமய வீதி இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
அந்த வகையில், மொத்தம் 12 பொலிஸ் பகுதிகளும், 68 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டிருப்பதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,380 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் 500க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அந்த வகையில், 8,143 பேர் நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்றும் 712 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியிருந்தனர். இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,051 ஆக உயர்ந்துள்ளது. 187 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri