மற்றுமொரு அதி விசேட வர்த்தமானி வெளியானது!
சேதன, சேதனமற்ற மற்றும் பொஸ்பரஸ் உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையிலும், கிளைபோசேட் பாவனைக்கு தடை விதிக்கும் வகையிலும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி இரசாயன பசளை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். குறிப்பாக இராசயன பசளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இரசாயன பசளை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டை தொடர்ந்து நாட்டில் விவசாய உற்பத்தி வெகுவாக குறைவடைந்ததுடன், காய்கறிகள் உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது.
இதனையடுத்து விவசாயிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்த நிலையில், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.
இதன்படி, சுமார் 7 மாதங்களாக இரசாயன பசளை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த மாதம் 24ம் திகதி நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, குறித்த விடயம் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.