இலங்கையில் கோவிட் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு
இலங்கையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை,நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 108 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,832ஆக உயர்வடைந்துள்ளது.