ஜெனிவாவில் இலங்கைக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி
நாட்டில் ஊடக சுதந்திரம் மீறப்பட்டு வருவது தொடர்பில் இடம்பெற இருக்கும் ஜெனிவா மனித உரிமை பேரவையில் பாரியளவில் கலந்துரையாட வாய்ப்பு இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ் உப தலைவர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கருத்து தெரிவிக்கும் உரிமை நாட்டின் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் உரிமையாகும். அதனை தடுப்பதற்கு யாராவது முயற்சித்தால், சர்வதேசம் அதுதொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்.
அரசாங்கம் இதுவரைக்கும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இதுதொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்கும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கு ஆரம்பித்திருக்கின்றது.
அண்மைக்காலமாக ஊடக சுதந்திரத்துக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதனால் நாட்டில் ஊடக சுதந்திரம் மீறப்பட்டு வருவது தொடர்பில் இடம்பெற இருக்கும் ஜெனிவா மனித உரிமை மாட்டில் பாரியளவில் கலந்துரையாட வாய்ப்பு இருக்கின்றது. அது நாட்டுக்கு மிகவும் பாதகமான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு இடமிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri