பண்டிகை காலத்தில் பலகார இனிப்பு பிரியர்களுக்கு சோகமான செய்தி
பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், பலகாரங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பலகார உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலகார உற்பத்திக்கான அரிசி, சீனி, பயறு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையினால் இவ்வாறு பலகாரங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இம்முறை பண்டிகைக் காலத்தில், பழைய விலையில் பலகாரங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பலகாரம் குறைந்த பட்சம் 30 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
25 ரூபாவாக விற்கப்படும் கொண்டை பலகாரம் ரூ.50 இற்கும், 35 முதல் 40 ரூபாவை விற்பனைச் செய்யப்பட்ட பயிற்றம் பலகாரம் 55 ரூபாவுக்கும், 30 ரூபா வரை விற்கப்பட்ட தேன் குழல் 40 முதல் 50 ரூபாவுக்கும், 15 ரூபாவுக்கு விற்கப்பட்ட கொக்கிஸ் 30 ரூபாவுக்கும், 60 ரூபாவாக இருந்த ஆஸ்மி 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும், பண்டிகை நெருங்கும் போது இவ்விலைகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இம்முறை பண்டிகைக் காலத்தில் பலகாரங்களுக்கான விலை அதிகரிப்பினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பலகார உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில் Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
