இலங்கைக்கு ஏற்படவுள்ள மற்றுமொரு நெருக்கடி (VIDEO)
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு தீர்மானத்தை நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne), இந்த தீர்மானமானது வெளிநாட்டு முதலீட்டாளர்களால் கவனத்தில் கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இம்முறையும் சிறிலங்கா தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
கடன் என்பது ஒரு பிரச்சினை. நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல, அபிவிருத்தி செய்ய
வேண்டுமாயின் முதலீடுகள் அவசியம். இங்கு நம்பிக்கை தொடர்பான பிரச்சினை
எழுந்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்திகளின் தொகுப்பு,