மக்களுக்கு மேலும் பேரிடி - அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம்
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சேவைக் கட்டணங்களுக்கான விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.
இந்நிலையில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும்,தேவையேற்படும் பட்சத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிர்வரும் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாததாலும், தற்போது ஒரு யுனிட் தண்ணீரின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாலும் இந்த விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.
மேலும்,மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், அதற்கேற்ப நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என, விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் செய்யும்போது குறைந்த அழுத்தத்தில் நீர் பாயும் என நீர்வளங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், நீர் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவையிலுள்ள அனைத்து நுகர்வோருக்குமான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில் Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
