கோவிட் அலைக்கு மத்தியில் மற்றுமொரு சவால் - மக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்
எமது நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்திருக்கும் இந்த சூழ்நிலையில் மற்றுமொரு சவாலாக டெங்கு நோயும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
தற்போது மழை காலம் ஆரம்பித்து இருப்பதனால் டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எமது வீடுகள், அலுவலகங்கள் அடங்கலாக நீர்த்தேங்கி நுளம்புகள் பரவும் இடங்களை உடனடியாக சுத்தம் செய்து தங்களையும், தங்களது அயலவர்களையும் பாதுகாத்து கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு காய்ச்சலினால் ஒரு சிறுவர் பாதிக்கப்பட்டதையடுத்து சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம். பைசால் தலைமையில் இன்று கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மூலம் சாய்ந்தமருதில் பல இடங்களில் தீவிரமான முறையில் புகை விசிறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

