நாட்டில் மற்றொரு கறுப்பு ஜீலை உருவாக கூடாது! சோஷலிச இளைஞர் சங்கம்(Video)
கறுப்பு ஜூலை போன்ற இன்னொரு நாளை நாட்டில் உருவாக்காமல் இருபதற்கு இளைஞர்கள் இன,மத,மொழி பேதமின்றி செயற்பட வேண்டும் என சோஷலிச இளைஞர் சங்கத்தின் கொழும்பு உறுப்பினர் கார்மேகம் தினேஷ்குமார் கூறியுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தை தொடர்ந்து இன்று(29) விகாரமஹாதேவி பூங்காவில் சகோதரத்துவம் தினம் ஒர் நிகழ்வாக கொண்டாடப்பட்டுள்ளது.
இந்நிழ்வில் கலந்துக்கொண்டு எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“2008 ஆம் ஆண்டில் இருந்து கறுப்பு ஜூலைக்கு எதிர்ப்பை வழங்குவதுடன் சகோதரத்துவத்தை வளர்க்கும் தொனிப்பொருளுடன் செயற்படுகின்றோம்.
இனவாதத்தை ஒழிப்போம் ஒன்றாக பறந்திடுவோம் என்ற தொனிப்பொருளிலே எமது செயற்திட்டங்களை செய்கின்றோம்.
இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்கள் அனைவரும் எந்த இன,மத, வேறுபாடகளும் இன்றி செயற்படுவதே முக்கியமான விடயமாகும். சகோதரதுவத்தை பேணுவதன் மூலமே எம்மால் நாட்டை கட்டியெழுப்ப முடியும்”என கூறியுள்ளார்.