இலங்கையில் மேலும் 39 பேர் கோவிட் தொற்றுக்கு பலி
இலங்கையில் மேலும் 39 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1566 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 17ம் திகதி நேற்று வரையில் இந்த 39 மரணங்களும் பதிவாகியுள்ளது. இதன்படி, இன்றைய தினம் கோவிட் மரணங்கள் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மே 17ம் திகதி ஒருவரும், 22ம் திகதி ஒருவரும், 25ம் திகதி இருவரும், 26ம் திகதி நால்வரும், 27ம் திகதி ஆறு பேரும், 28ம் திகதி மூவரும், 29ம் திகதி ஆறு பேரும், 30ம் திகதி ஐவரும், 31ம் திகதி ஏழு பேரும், ஜூன் முதலாம் திகதி நால்வரும், இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 19 பெண்களும், 20 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan