இலங்கையில் மேலும் 31 பேர் கோவிட் தொற்று காரணமாக மரணம்
இலங்கையில் மேலும் 31 பேர் கோவிட் தொற்று காரணமாக மரணமாகியுள்ளனர்.
இந்த இறப்புக்கள், ஜூலை 16 நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிச் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 3,733 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை இன்று இதுவரையில் 980 கோவிட் தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் கோவிட் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 283040 ஆக உயர்ந்துள்ளது.23505 பேர் பல இடங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 5404938 பேர் கோவிட் முதல் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
1646176 பேர் கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.