இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று! வெளியானது புதிய அறிவிப்பு
இலங்கையில் 160 புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற 180 மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே, இந்த 160 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வு தொடர்பிலான அறிக்கை, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற கோவிட் தொற்றாளர்களில் 12 முதல் 24 வீதமானோர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri