இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்?
அரசாங்கம் அண்மையில் பெற்ற கடன்கள் மற்றும் உதவிப் பொதிகளுக்கு மேலதிகமாக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடமிருந்து பெறக் கூடும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் இலங்கைக்கு பாரிய உதவிப் பொதி கிடைத்துள்ளது.
இதற்கு மாற்றாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவையும் அரசாங்கம் பெற முடியும்.
தேவைப்படும் நேரத்தில், நேச நாடுகள் இலங்கைக்கு உதவி செய்வதால் நாடு தனிமைப்படுத்தப்படவில்லை அல்லது திவால்நிலையின் விளிம்பில் இல்லை.
அரசாங்கம் பொது வாக்கெடுப்பு நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை மாறாக அடுத்த மூன்று வருடங்களில் தனது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
