யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு: தொலைபேசி அழைப்புகளால் அவதியுறும் பேரவை உறுப்பினர்கள்
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் (12.04.2023) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, “நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து (எஸ்.ஐ.எஸ் ) அழைக்கிறோம்.
இரகசிய அறிக்கை
யார் துணைவேந்தராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? நாங்கள் தான் இரகசிய அறிக்கை கொடுக்க வேண்டும்.அதற்காகத் தான் கேக்கிறோம்” என்று பேசப்பட்டதாகப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தெரிவுக்கான பேரவை நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறு அழைக்கப்படுவது நல்லதல்ல என்றும் இதனால் பேரவை உறுப்பினர்கள் சிலர் விசனமடைந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
