அனோஜனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்.. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த களுதாவளை மக்கள்
சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை மன்னித்து விடுதலை செய்யுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (27.09.2026) களுதாவளை பிரதான வீதியில் அமைதிவழி கவன ஈர்ப்பு நடைபெற்றது.
இதன்போது களுதாவளையிலுள்ள ஆலயங்களின் பிரதிநிதிகள், சங்கங்கள், மன்றங்களின் உறுப்பினர்கள், களுதாவளை பிரதேச சபை உறுப்பினர்கள், ஏனைய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி அவரின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இதன்போது கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.
அனோஜன் எங்களது பிள்ளையைப் போன்றவர்தான், தெரியாமல் சமூக வலைத்தளத்தில் தவறிழைத்துவிட்டார், அவரால் அவரது குடும்பம் மர்ததிரமின்றி நாங்களும், மிகவும் கவலையிலுள்ளோம், எனவே அவரை மன்னித்து விடுதலை செய்யுமாறு சவுதி மன்னரிடம் மிகவும் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம். என இதன்போது கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.