அனோஜனின் விடுதலைக்காக இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்த இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்
அனோஜனின் விவகாரம் தொடர்பில், உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அந்தோனி வி. பிர்னோட் ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று(23.09.2026) இடம்பெற்றுள்ளது.
அனோஜனின் விடுதலைக்காக உயர்மட்ட சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், சன்முகம் குகதாசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதன்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலை தொடர்பாகவும், அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சஹ்ரானுடைய விரல் சைகையை காட்டிய குற்றவாளிகள் : நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன...!