சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா
யாழ்ப்பாணம்(Jaffna) - வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று(26.05.2024) காலை 9:00 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றுள்ளது.
வைகாசிப் பெருவிழா
பஞ்ச புராணம் ஓதுதலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் வரவேற்பு நடனம், வரவேற்பு உரை, பட்டிமன்றம், நடனம், பண் இசைக் கச்சேரி, மயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், உட்பட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து, சந்நிதியான் ஆச்சிரமத்தோடு தொடர்ந்து சேவையாற்றிய பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற
அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு
பேரவை நிர்வாகிகள், நலன்விரும்பிகள், என பலரும் கலந்து கொண்டு
சிறப்பித்துள்ளனர்.





உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
