புளியந்தீவு - கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு - புளியந்தீவு, கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்பில் பால்குட பவனியும் நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்ட திருச்சடங்கு
கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்டதாக நடைபெற்று வருகின்றது.
மாலை மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூரணகும்பம் மற்றும் பூசைப்பெட்டிகளுடன் பெருமளவான பக்தர்கள் பால்குடம் ஏந்திவர பவனியாக ஆலயத்தினை வந்தடைந்தது.
பாலாபிஷேகம்
ஆலயத்திற்கு பால்குடபவனி ஆலயத்தின் திருச்சடங்கிற்கான கதவு திறக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் அம்பாளுக்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது.
வருடாந்த திருச்சடங்கில் ஏழாம் நாள் சடங்காக கல்யாணக்கால் சடங்கும், ஒன்பதாம் நாள் சடங்காக கும்பச்சடங்கும் நடைபெற்று 10ஆம் நாள் சடங்காக தவநிலை சடங்கும் நடைபெற்று மறுநாள் தீமிதிப்பு சடங்கும் நடைபெறும்.









