மதஸ்தலம் ஒன்றில் அமைந்திருந்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வரும் உணவகங்கள் வெதுப்பகங்கள் மீது தொடர்ச்சியாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகரசபை சுகாதார குழுவினர் இணைந்து பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றையதினம்(09.10.2025) மன்னார் மூர் வீதியில் மதஸ்தலம் ஒன்றினுள் இயங்கி வந்த உணவகம் ஒன்று மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகஸ்தரினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு முறைப்பாடுகள்
குறிப்பாக உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமை, தலையுறை, கையுறை அணியாமை, அதிகளவான ஈக்கள், கழிவு நீர் உரிய முறையில் அகற்றப்படாமை, அசுத்தமான முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை, அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை போன்ற பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்ட நிலையில் குறித்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மன்னார் நகரசபை பகுதிக்குள் இயங்கி வரும் உணவகங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சமையலறையில் மின்விசிறி நிறுவிய விவகாரம்... கடவுச்சீட்டை முடக்கி பெருந்தொகை அபராதம் விதிப்பு News Lankasri

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
