கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா
கிளிநொச்சி - கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா வழமை போன்று இந்த ஆண்டிலும் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் விழா தொடர்பான, ஆலோசனைக் கூட்டம் இன்று(20-02-2026) பகல் 10.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
பொங்கல் விழா நிகழ்வு
கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கு வைத்தலுடன் ஆரம்பமாகி ஏப்ரல் 01ம் திகதி பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாகதம்பிரான் ஆலய முன்றலில் முற்பகல் 10 மணிக்கு ஆலய பூசை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய முன்றலில் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு பிரதிப்பணிப்பாளர், துறைசார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஆலய தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.







வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam