அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை பெயரிடுமாறு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று உள்ளூராட்சி மன்றங்களை வென்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள்
இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று (07) வெளியான நிலையில், பல உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியைப் பிடித்துள்ளது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சில சுயேட்சைக் குழுக்களும் சில உள்ளூராட்சி நிறுவனங்களில் வெற்றிப்பெற்றுள்ளன.
இருப்பினும், பல உள்ளுராட்சி மன்றங்களில் அந்தக் கட்சிகளால் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியவில்லை.
வர்த்தமானியில் வெளியிடப்படும்
இதற்கிடையில், வட்டார மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடுத்த சில நாட்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறித்து, எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், வட்டார மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் நியமிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகள் குறித்தும் அறிவிக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
