காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை விரைவில் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தான் வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “தன்னை இன்று காலை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்திய நாட்டின் ஜனாதிபதி விரைவாக வடக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை எதிர்வரும் சனிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan