ஐ.எம்.எப் மற்றும் இந்தியாவுடன் இலங்கை மேற்கொண்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட வேண்டும்: மட்டக்களப்பில் ஆவேசம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செய்த ஒப்பந்தம் எல்லாமே இலங்கையை தனது ஒரு பகுதியாக காட்டும் ஒரு ஒப்பந்தம், அவ்வாறே ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தம் வெளிநாட்டில் உற்பத்தி செய்கின்ற பொருட்களின் சந்தையாக இலங்கையை மாற்றுவதற்கு செய்யப்படும் ஒப்பந்தம், எனவே இவைகள் கிழித்தெறியப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்க மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
அநுர - மோடி திருட்டு ஒப்பந்தத்தை கிழித்தெறி, ஐ.எம்.எப் மரணப்பொறியை எதிர்த்திடுவோம் எனும் தொனிப்பொருளில் ஒருநாள் எதிர்ப்பு சத்தியாகிரக போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று (02) இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அநுர செய்த ஒப்பந்தம் என்ன?
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செய்த ஒப்பந்தம் என்ன? ஏன் செய்தார்? எதற்காக செய்தார்? என இன்று வரைக்கும் பதில் இல்லை. தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கேட்டால் அப்படி ஒன்றும் தரவில்லை. ஆனால் 7 ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இந்திய பத்திரிகைகளில் இலங்கையுடன் 10 ஒப்பந்தங்கள் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே இந்த ஒப்பந்தங்கள் எல்லாமே இந்தியா தனக்கு சாதகமாக இலங்கையை தனது ஒரு பகுதியாக காட்டும் ஒரு ஒப்பந்தமே என தெரியாமல் இருக்கின்றது.
சம உரிமை கிடைக்காது
அதனால் தான் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கேட்டால் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. எனவே இந்த அநுர - மோடிக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட திருட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும், ஐ.எம்.எப் ஊடாக எடுக்கப்படும் திட்டத்தால் இனங்களுக்கிடையே சம உரிமை கிடைக்காது என்பதை விளங்கி கொண்டோம்.
ஏற்கனவே ஐ.எம்.எப்பிடம் 16 முறை கடன் வாங்கி கொண்டு சீரழிக்கப்பட்டு ஒரு யுத்த சூழ்நிலைக்குள் வைத்திருந்ததே தவிர எமது பிரச்சினையை தீர்க்க எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 16 மணி நேரம் முன்

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
