சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
மறைந்த பெருந்தலைவர் சம்மந்தனின் புகழுடலின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 07/07/2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று சடலம் மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் அக்கினியுடன் சங்கமமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அன்னாரின் இல்லத்தில் இந்து மதமுறைப்படி கிரியைகள் இடம்பெற்று பின்னர் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை அரச நிகழ்வாக நடத்துவதற்கு முதலில் சிலரால் ஆலோசிக்கப்ப்பட்டாலும் சம்பந்தனுடைய குடும்பத்தினர் அதனை ஏற்கவில்லை.
அதனால் இந்துமத காலாசார முறைப்படி அது முன்னெடுக்கப்படும் என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
இறுதி மரியாதை
இறுதி நிகழ்வுகளை இலங்கைத்தமிழரசுக்கட்சி திருக்கோணமலை மாவட்டக்கிளை தலைமையேற்று முன்னெடுக்கும் என்று திருகோணமலை தமிழரசுக்கட்சியின் மாவட்டக்கிளை கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தமிழரசுக்கட்சியின் கொடி அன்னாரின் புகழுடலுக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவா மற்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்களால் போர்த்தி கட்சியின் இறுதி மரியாதை வணக்கம் இடம்பெறும்.
மேலும் மறைந்த சம்மந்தனின் கடந்தகால செயல்பாடுகள் தொடர்பான நினைவுரைகள் 7ம் திகதி காலை தொடக்கம் இடம்பெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இந்த தகவலில் மாற்றங்கள் ஏதும் இருப்பின் பின்னர் அறியத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |