முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
பண்டிகை காலத்தில் முட்டை விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையிலேயே பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை எவ்வித தட்டுப்பாடுமின்றி நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முட்டை விலை அதிகரிப்பு
இதற்கமைய, பண்டிகை காலத்தில் முட்டை விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையிலேயே பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
அத்துடன், தட்டுப்பாடின்றி கோழி இறைச்சியை வழங்குவதாகவும், அதன் விலை ஏற்கனவே குறைந்து வருவதாகவும் கோழி இறைச்சி உற்பத்தி மற்றும் வர்த்தக சங்கங்கள் உறுதியளித்தன.
அதன்படி, கால்நடைத் தீவனங்களின் தரத்தைப் பேணுவதற்கும், தீவன உற்பத்தியாளர்களைப் பதிவு செய்து உற்பத்தி நிலையங்களைப் பரிசோதிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.