திருமண நிகழ்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!
சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றாது திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்று முதல் திருமண நிகழ்வுகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வை செய்யது வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், சுகாதார விதிகளை பின்பற்றாது செயற்பட்டுள்ளமை தொடர்பான நிழ்படங்கள் கிடைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கோவிட் ஒழிப்பிற்கான தேசிய செயலணியின் தலைவர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இனிவரும் நாட்களில் நடத்தப்படும் திருமண நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் விதிக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri