மீண்டும் மின் தடை ஏற்படுமா? மின்சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்
இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வாரம் நாட்டின் பல பாகங்களிலும் மாலை 6 மணிக்குப் பின்னர் ஒரு மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டதாக அமைச்சின் பேச்சாளரான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
மின் உற்பத்தி பற்றாக்குறை மற்றும் அதிக தேவையின் நிமித்தம் இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
நாளாந்த மின்சாரத் தேவையில் 60% நீர் மின்நிலையங்களிலிருந்தும், ஏனைய மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களிலிருந்தும் பெறப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் வழமை போன்று மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளமையால் இன்று முதல் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.