மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய காம்யோற்சவ திருவிழா அறிவித்தல்
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய காம்யோற்சவ வருடாந்த திருவிழா கடந்த 22.07.2023 அன்று ஆரம்பமாகி இனிதே நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இவ்வாலய திருவிழா பற்றி வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மாவைக்கந்தன் ஆலய திருவிழா காலங்களில் விசேட தினமான திருக்கார்த்திகை திருவிழா எதிர்வரும் 09ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பூஜைகள், ஆராதனைகள் இடம்பெறும்.
வசந்த மண்டப பூஜை
இதன்போது அடியவர்கள் தங்களுடைய நேர்த்திக் கடன்களை செய்து கொள்ளலாம்.
எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 3 மணிக்கு வேட்டைத் திருவிழாவும் 13ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் பெரிய சப்பரத் திருவிழாவும் நடைபெறும்.
14ஆம் திகதி காலை 9.30 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறுவதுடன் 15ஆம் திகதி அதிகாலை 5மணிக்கு தீர்த்தோற்சவமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்த்தோற்சவ நாளில் அடியவர்கள் அனைவரும் கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தமாடி தங்களுடைய முன்னோர்களுக்கு பித்ருக்கடன்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
