நோர்வே மன்னர் ஹரால்ட்டின் உடல்நிலை குறித்து வெளியான அறிவிப்பு - அவசரமாக நாடு திரும்பிய மதத்தலைவர்கள்
நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று(27.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.
இரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக ஓகஸ்ட் 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் ஹரால்ட், 1991 ஆம் ஆண்டு முதல் நோர்வேயின் தலைவராக கடமையாற்றி வருகிறார்.
மன்னரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, இளவரசர் ஹாகோன் மற்றும் அரசி சோன்யா ஆகியோர் தமது அனைத்து உத்தியோகபூர்வ நிகழ்வுகளையும் இரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவியை துறக்க மறுப்பு
மன்னர் சிகிச்சை பெற்று வரும் ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு அரச குடும்ப உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதையடுத்து, அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.

இந்த நிலைமை காரணமாக நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே தனது ஜெர்மனிக்கான பயணத்தை இரத்துச் செய்துள்ளதுடன், மன்னருக்கும் அரச குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த தேசத்தினதும் பிரார்த்தனைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நோர்வே நாடாளுமன்ற சபாநாயகர் தனது ஐஸ்லாந்து பயணத்தை பாதியிலேயே கைவிட்டு நாடு திரும்பியுள்ளதுடன், ரோம் நகருக்கு விஜயம் செய்திருந்த நோர்வே மதத்தலைவர்களும் அவசரமாக நாடு திரும்ப தீர்மானித்துள்ளனர்.
தனது வயது முதிர்வு காரணமாக உத்தியோகபூர்வ செயற்பாடுகளை குறைத்துக்கொண்ட போதிலும், நாட்டின் மீதான தனது உறுதிமொழி ஆயுட்காலம் வரை நீடிக்கும் எனக் கூறி மன்னர் ஹரால்ட் தனது பதவியை துறக்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening