இராணுவ தலைமையகத்தின் முக்கிய அறிவிப்பு
இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களுக்கு மக்களை ஏமாற வேண்டாம் என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இராணுவத்தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பொறுப்பற்ற சமூக ஆர்வலர்கள் பலர் இராணுவத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான காணொளிகளை வெளியிட்டு வருவதாக தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஊடக நெறிமுறை
அதாவது, ஊடக நெறிமுறைகளுக்கு மாறாக தனிப்பட்ட ஆதாயங்களை அடிப்படையாக கொண்டு இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக இராணுவத்தினருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.79,000 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ வன்பொருள்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் News Lankasri
பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam