இலங்கையில் 93 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்! அநுர அரசில் நிகழ்ந்த அதிசயம்
93 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டவில் அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசாங்கத்தின் கீழ் இந்த அதிசயிக்கத்த மாற்றம் நிகழ்ந்துள்ளதுடன், பலரும் முன்வந்து வரிகளை செலுத்துவதாக, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2024/2025ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோரை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆணையாளர் நாயகம் நம்பிக்கை
வரி செலுத்துவோருக்கான இவ்வாறான அறிவுறுத்தல்கள், அதன் இலக்குகளை அதிகரிக்க உதவும் என உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வரி வருமானத்தை முறையாக செலுத்துவது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பொறுப்பான குடிமக்களின் பொறுப்பாகும் அவர் சுட்டிக்காட்டினார்.
வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், செலுத்தத் தவறுவோருக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.