இலங்கைக்கு பயணிப்பது தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கைக்கான பயண ஆலோசனையை, எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என்று பரிந்துரை செய்து பிரான்ஸ் அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை 2022, ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த புதிய பயண ஆலோசனை நேற்று(17) பிரான்ஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இலங்கையில் பயணம் செய்யும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகங்களை
நிர்வகிப்பதற்கு, உள்ளூர் பயண முகமைகளுடன் பயணத் திட்டங்களை முன்னெடுத்து
செல்லுமாறு பிரான்ஸ் தமது சுற்றுலா பயணிகளை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam