புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் காலை 9.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளைய தினம் (21.11.2024) 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து, இந்த விடயத்தினை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
அறிவுறுத்தல்
நாடாளுமன்றத்திற்கு வரும்போது உறுப்பினர்களின் வாகனங்கள் பொலிஸாரால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களின் கூடங்களில் நுழைவதுடன், வாக்கழைப்பு மணியோசை அடிக்கும்வரை அங்கு தங்கியிருத்தல் வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணைவி அல்லது துணைவரோடு வருகின்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் நுழைவாயில் அருகில் இறங்க வேண்டும். மற்ற எல்லா உறுப்பினர்களும் உறுப்பினர்களின் நுழைவாயிலின் அருகில் இறங்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
