இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கான முக்கிய அறிவித்தல்! அதிகரிக்கப்படும் கட்டணம்
நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கோவிட் காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது 7,500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் குறித்த காப்புறுதியானது 5,000அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
நாட்டின் சுற்றுலா வலயத்திற்கு அருகில் பிரத்தியேகமானதொரு பொலிஸ் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை மற்றும் உனவட்டுன பகுதியில் அதற்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த மாதத்தில் மாத்திரம் 82, 327 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
