இரண்டாவது அளவை தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார மையம் விடுத்துள்ள அறிவித்தல்

Srilanka Covid
By Ajith May 30, 2021 03:47 PM GMT
Report

எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை பெறுபவர்கள் இரண்டாவது அளவை தடுப்பூசியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் தடுப்பூசியின் செலுத்துகையை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க அவசியமில்லை என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

எஸ்ட்ராசெனெக்காவின் இரண்டாவது அளவு, முதல் அளவு வழங்கப்பட்டு 8-12 வாரங்களில் பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும் இலங்கையில் முதல் அளவு செலுத்தப்பட்டு தற்போது 12 வாரங்களும் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எஸ்ட்ராசெனெகாவின் முதல் மற்றும் இரண்டாம் அளவுகளுக்கு இடையில் ஆறு மாத இடைவெளி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ட்ராசெனெகாவின் இரண்டாவது அளவை செலுத்துவதற்கு இலங்கைக்கு 585,000 குப்பி எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் தேவை. எனினும் போதுமான குப்பிகளை இலங்கை பாதுகாத்து வைக்கவில்லை.

உலக சுகாதார அமைப்பின் குறிப்பின்படி, உற்பத்தி தாமதங்கள், கப்பல் தாமதங்கள் மற்றும் குறிப்பிட்ட எதிர்பாராத நாட்டின் தேவைகள் உள்ளிட்ட பல காரணிகளால் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளின் உலகளாவிய வழங்கல் தடைபட்டுள்ளது.

எனவே உலக விநியோக அமைப்பின் 8-12 வார கால அட்டவணையில் kuritha தடுப்பூசியின் இரண்டாவது அளவை செலுத்துவது எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்பதால் எதிர்கால விநியோகத்தின் நிச்சயமற்ற தன்மை கொள்கை மற்றும் நிரல் தாக்கங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பக் குறிப்பு உலக சுகாதார அமைப்பின் செயலகத்தால் உருவாக்கப்பட்டது. மற்றும் கோவிட் தடுப்பூசிகள் குறித்த நோய்த்தடுப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு மற்றும் பணிக்குழுவின் உறுப்பினர்களால் இது மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை தரவுகளின்படி, எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் அளவு செலுத்தப்பட்டு 22 நாட்களுக்குப் பின்னரே கோவிட் தொற்றுக்கு எதிரான செயல்திறன் ஆரம்பிக்கின்றது.

இந்த நிலையில் ,முதல் அளவுகளின் செலுத்துகைக்கு பிறகு, மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் இறப்பில் 80% க்கும் அதிகமான குறைவு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் முதல் அளவுக்கு பிறகு முதல் 6-12 வாரங்களில், மருத்துவமனையில் மற்றும் இறப்புகளில் 80% (95% 36-95%) க்கும் அதிகமான குறைவுகள் பதிவாகின.

இந்த கண்காணிப்பு ஆய்வுகள் இந்த 12 வாரங்களுக்குள் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி, கடுமையான நோய்க்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பின் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US