புலம்பெயர் இலங்கையர்கள் குறித்து மத்திய வங்கியின் நாணயச்சபை விடுத்துள்ள அறிவிப்பு
புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய மற்றும் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட வைப்புகள் இரண்டுக்கும் உயர்வான வட்டி வீதங்களை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.
2022 பெப்ரவரி 1முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, உரிமம் பெற்ற வங்கிகள், ஏனைய முறைசார் வழிகளூடாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றுக்கு ரூ.1,000 கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீள வழங்கவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 50 அடிப்படை புள்ளிகளால் 5.5% மற்றும் 6.5% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அறிவித்துள்ளது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam