அரச நிறுவனங்களுக்கு நிதி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்ளவும், புதிய கட்டிடங்கள் கட்டுவதை உடனடியாக நிறுத்தவும், எரிபொருள் மற்றும் தொலைபேசி கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் சில அரச நிறுவனங்கள் அரசைச் சார்ந்திருப்பதை நிறுத்த வேண்டும் எனவும் நிதி அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
அமைச்சின் ஊழியர்கள், அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 5 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவுகளை குறைப்பதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |





விசாரணைக்கு கைக்கோர்த்து வந்த மாதம் ரங்கராஜ்.. பிரசவத்தை நெருங்கும் ஜாய் கிரிசில்டா- நேரில் சந்திப்பு! Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
