வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு
வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்டிய கடல் பகுதிகளுக்குள் இன்று முதல் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம்,கடற்படையினர் மற்றும் மீன்பிடி சமூகங்கத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் இந்த கடல் பகுதிகளுக்கு தற்போது சென்றுள்ள கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் விரைவில் கடற்கரைகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று வானிமை மையம் அறிவுறுத்தியுள்ளது.
கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பகுதி மே 23 ஆம் திகதியான நாளையதினம் தீவிரமாகும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
இது எதிர்வரும் 24 ஆம் திகதிக்குள் சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. அத்துடன் மே 26 ஆம் திகதி வடமேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்க கடற்கரைக்கு அருகில் வர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்
சில நேரங்களில் 70-80 கிமீ வேகம் வரையிலான காற்றுடன் இடியுடன் கூடிய மழை
பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எதிர்வுக்கூறியுள்ளது.