லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முற்பதிவு செய்யப்பட்டுள்ள எரிவாயு அடங்கிய கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு உருளைகளை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இதன் காரணமாக, எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்றுடன் 5 நாட்களாக வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை. இதற்கு மாற்று வழியாக, மண்ணெண்ணெய் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் தற்போது பொதுமக்களுக்கு இல்லாமல் போயுள்ளது.இதன் காரணமாக நகர் பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, எரிவாயுவினை பெறுவதற்கான வரிசைகளைப் போன்று மண்ணெண்ணெய்க்காகவும் மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருக்கும் சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.

நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri