தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நாளை நல்லூரடியில்
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இதன்போது நாளை (19.04.2023) அன்னை ஈகைச் சாவினைத் தழுவிக்கொண்ட நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறும்.
இவ் நினைவேந்தலில் ஈகைச்சுடரினை தியாகத்தாய் அன்னை பூபதியின் பேத்தி ஏற்றிவைக்கவுள்ளார்.
அனைவரையும் இவ் அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வாகரை கதிரவெளி புச்சாக்கேணியில் இடம்பெற்றது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வாகரைப் பிரதேச இணைப்பாளர் சதீஸ் அவர்களின் ஏற்பாட்டில் உறுப்பினர் சங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், நகரப் பொறுப்பாளர் தேவகுமார், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணிப் பொறுப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள், வட்டாரங்களுக்கான பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், வாகரைப் பிரதேச மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு
அன்னை பூபதியம்மாவின் 35 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினா யாழில் தியாக தீபம் திலீபன் பூங்காலில் இருந்து ஆரம்பித்து பூபதியம்மாவின் உருவச்சிலை தாங்கிய ஊர்த்தி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை இன்று செவ்வாய்க்கிழமை (18) வந்தடைந்ததுடன் அங்கு உருவச்சிலைக்கு பொதுமக்கள் கட்சி ஆதரவாளர்கள் மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அன்னை பூபதியம்மா 1988 ம் ஆண்டு மாச் 19 ம் திகதி இந்திய அமைதிபடையினருக்கு எதிராக 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் 31 தினம் உண்ணா நோன்பு இருந்து ஏப்ரல் 19 ம் திகதி உயிர்நீத்துள்ளார்.