லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதியின் 37ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
1988 ஆம் ஆண்டு தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு தனது உயிரைத் தியாகம் செய்த அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு லண்டனில் நடைபெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரித்தானிய கிளையின் ஒழுங்கமைப்பில் லண்டனில் ஈழத்தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஈஸ்ட் ஹாம் பகுதியில் இன்றையதினம் (19) இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் யோகன் ரட்ணம் பொதுச்சுடரினை ஏற்றி ஆரம்பித்துவைத்தார்.
இந் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரித்தானிய செயற்பாட்டாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வேந்தல் செய்தனர்.
1988 ஆம் ஆண்டு தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் முன்றலில் சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு அகிம்சைப் போராட்டத்தை அன்னை பூபதி மேற்கொண்டு தனது உயிரைத் தியாகம் செய்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
