மட்டக்களப்பில் மூவருக்கு எதிராக முறைப்பாடளித்த அன்னை பூபதியின் மகள்
மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தலுக்காக வெளிநாட்டில் பணம் சேகரித்த மூவருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் சாந்தி முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாடு இன்று செவ்வாய்க்கிழமை(15) பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தியாக தீபம் அன்னை பூபதியின் 37ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது.
அமைதியாக செய்ய வேண்டிய நினைவேந்தல்
இந்த நிலையில், குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித நேய செயற்பாட்டாளர்கள் சிலர் நோர்வே நாட்டில் இருந்து பணத்தை பெற்று விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கும் அன்னையின் திருவுருவ படத்தை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

அமைதியாக செய்ய வேண்டிய இந்த நினைவேந்தலை இவர்கள் அரசியலாக்கி இலாபமடையவுள்ளதாகவும் இவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை எனவும் அன்னை பூபதியின் மகள் சாந்தி தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்த மூவரின் செயற்பாட்டை தடுத்து நிறுத்தி நினைவேந்தலை அமைதியாக செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறு அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        