சவால்களை எதிர்கொள்ளும் பலம் அரசுக்கு உண்டு:நிதி பிரதியமைச்சர் நம்பிக்கை தெரிவிப்பு
எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும், ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு ஒரு அரசியல் இயக்கமாக எந்த சவாலையும் எதிர்கொள்ள பல்வேறு பணிகளை மேற்கொண்டது.
அதனாலே இன்று, அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது என்று நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சரும் பிரதி அமைச்சருமான டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (01) நடைபெற்ற புதுவருட நிகழ்வில் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாங்கள் ஆட்சிக்கு வந்து சுமார் ஒரு வருடம் ஆகிறது. பொது சேவை தொடர்பாக சமூகத்தில் ஒரு இருண்ட யுகம் இருந்தது.பொது சேவை செயல்படுவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் இப்போது, சமூகத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
நாம் பேசும் அரசியல் தலைமை மிகவும் முக்கியமானது. சவால்கள் எழும்போது நாம் பொதுமக்களுக்காக நிற்கிறோம்.அரசாங்கத்திற்குள் உள்ள எந்தவொரு சவாலுக்கும் நாங்கள் சரியான தலைமையை வழங்குகிறோம்.
ஜனாதிபதியும் இதற்கு சரியான தலைமையை வழங்குகிறார்.நீங்கள் எங்கள் மீது நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.