முன்னறிவிப்பின்றி பாகிஸ்தானுக்கு சென்ற பிரபல ஹொலிவூட் நடிகை
பிரபல ஹொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார். பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இயற்கை இடர் நிலைமைகளில் பாதுகாபக்கப்பட்டுள்ளவர்களின் நலன் அறிய அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினர்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான செயற்பாடுகள் சம்பந்தமான துறையின் உறுப்பினரான ஏஞ்சலினா ஜோலி எவ்வித முன்னறிவிப்பும் செய்யாது பாகிஸ்தான் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் சென்றுள்ள அவர், அந்நாட்டு அரசாங்கத்தின் பிரதான அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மக்களை சந்தித்து நலன் குறித்து விசாரித்த ஏஞ்சலினா ஜோலி
இதனடிப்படையில் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன பாகிஸ்தான் மக்களின் நலன்களை விசாரித்து அவை தொடர்பான தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு வழங்கிய பின்னர் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் அண்மையில் ஏற்படும் பெரும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகினர். வெள்ளம் காரணமாக 5 லட்சம் மக்கள் தமது இருப்பிடங்களை இழந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி 692 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பாகிஸ்தானுக்கு 30 பில்லியன் டொலர் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.