திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: பொலன்னறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் குற்றச்சாட்டு(Video)
பொலன்னறுவையில் பல பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன், இதனை சில பௌத்த பிக்குகள் இணைந்து முன்னெடுத்து வருவதாக பொலன்னறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்களின் பூர்வீக காணிகளையும் அபகரிக்கும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (24.05.2023) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சமய சமூக பணி
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலன்னறுவை இந்துக்குருமார் ஒன்றியம் எனது முயற்சியினாலேயே ஆரம்பிக்கப்பட்டு
நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் மீண்டும் புதிய நிர்வாக தெரிவின் ஊடாக
தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டேன்.
நாங்கள் எமது ஒன்றியம் ஊடாக பல்வேறு சமய சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
பொலன்னறுவை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். பழமையான சிவாலயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் இல்லை.
சிவாலயங்கள்
தமிழ் மக்களுக்கும் நான் சொல்லும் விடயம். பொலன்னறுவையில் பல சிவாலயங்கள் உள்ளன. எத்தனையோ சிவாலயங்கள் அநுராதபுரத்திலும் பொலன்னறுவையிலும் மறைக்கப்பட்டுள்ளன.
முத்துக்கல் என்னும் கிராமத்தின் காட்டுப்பகுதியில் சிவாலயம் ஒன்று மறைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சிவலிங்கம் உடைக்கப்பட்டுள்ளது. அங்கு பல புராதன சின்னங்கள், எழுத்துக்கள் உள்ளன. அந்த ஆலயங்கள் பௌத்ததேரர்களின் கைவசம் சென்றுள்ளது.
அந்த இடத்திற்கு செல்வதற்கு எங்களை அனுமதிப்பதில்லை. அங்கு பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றது.
தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் புதையல்கள் தோண்டப்படுவதாக தகவல்கள் வருகின்றது.
பாடசாலை கல்வி
இவ்வாறான நிலையிலேயே பொன்னறுவை இந்துக்குருமார் ஒன்றியம் சமய பணிகளில் ஈடுபட்டுவருகின்றது.
கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்துவருகின்றோம். பல்வேறு பிரச்சினைகளுடன் மக்கள் வாழுகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
