கெஹலியவிற்கு எதிரான வழக்கின் முக்கிய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முக்கிய அறிக்கையொன்று இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறிப்பாக தரம் குறைந்த ஹியுமன் ஹிமுனோகுளோபின் என்ற மருந்து இறக்குமதியில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மனித உரிமை
மாளிகாந்த நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து வகையில் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய பக்டீறியா வகை காணப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மருந்து குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் பெற்ற ஜெர்மனிய ஆய்வு கூடமொன்றில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் புற்று நோய்க்காக பயன்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் எவ்வித புற்று நோய் எதிர்ப்பு மருந்தும் இருக்கவில்லை எனவும் வெறும் உப்பு மட்டுமே காணப்பட்டது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களம்
சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த பரிசோதனை அறிக்கையை இன்று நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
இந்த போலி மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் 1444 லட்சம் ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 16ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
